கொச்சி: கேரள மாநிலத்திலுள்ள கொச்சியில் மேலும் வலுப்படுத்தப் பட்ட முறையில், குடியுரிமை திருத்த சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டம் பல புதிய அம்சங்களுடன் நடத்தப்பட்டது.

குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்து மத்திய அரசு நிறைவேற்றிய மசோதாவுக்கு எதிராக இந்தியா முழுவதும் பலமான எதிர்ப்பு தொடர்ந்து பதிவாகி வருகிறது. ஒவ்வொரு மாநிலமும் தங்களது போராட்டத்தை ஒவ்வொரு வழியில் புதிய அணுகுமுறைகளுடன் முன்னெடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் கேரள மாநிலமும் மிகவும் வலுவாக தனது எதிர்ப்பை காட்டி வருகிறது. இந்நிலையில் கொச்சியில் ஒரு மாபெரும் போராட்டம் மேலும் உணர்வு மேலோங்கிய வகையில், கோஷங்களை உள்ளடக்கியதோடு, தேசபிதா மகாத்மா காந்தி, டாக்டர். அம்பேத்கார், மவுலானா அப்துல் கலாம் ஆஸாத் ஆகியோரின் படங்களை கையில் ஏந்திய வண்ணம்  நடந்தேறியது.

லட்சம் பேர் பங்கேற்ற இந்த போராட்டத்தால் கொச்சி நகரமே குலுங்கியது. கேரள மாநிலம் நடத்தும் போராட்டங்கள் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. ஏனெனில், இம்மாநிலமானது கல்வியறிவில் சிறந்து விளங்குவதோடு அறிவுபூர்வமான அரசியல் முடிவுகளை எடுக்க்க் கூடியவர்கள்.

இதுபோல் தமிழ்நாட்டிலும் இந்த சட்டத்தை எதிர்த்தும் ஆதரித்தும் பல்வேறு வகையில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. தற்போது கோலம் போட்டு தங்களது எதிர்ப்பைக் காட்டுவதும் தொடர்ந்து வருகின்றது