கோதுமை விலை, நெடுஞ்சாலைகள் தரம் உயர்ததவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

டில்லி,

கோதுமை பருப்பு வகைகளுக்கான குறைந்த பட்ச ஆதார விலையை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. அதுபோல நெடுஞ்சாலைகளை தரம் உயர்த்தரவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் டில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் இதற்கான முடிவுகள்  எடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை 110 ரூபாயும், பருப்பு வகைகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை 200 ரூபாய் என  மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

அதாவது, கோதுமை விலை ஒரு  குவிண்டாலுக்கு ரூ. 110  உயர்த்தி உள்ளது. அதுபோல பருப்பு வகைகளின் கொள்முதல் விலையையும்  குவிண்டாலுக்கு 200 ரூபாய் உயர்த்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் எண்ணெய் வித்துக்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையையும் உயர்த்த அமைச்சரவை கூட்டத்தில்  ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் சாலை போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில், 7 லட்சம் கோடி ரூபாய் செலவில் தேசிய நெடுஞ்சாலை திட்டத்தை நிறைவேற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இந்தத்திட்டத்தின் கீழ் சுமார் 83 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிலான சாலைகள் மேம்படுத்தப்படும். அடுத்த ஐந்து ஆண்டுக்குள், அதாவது வரும் 2022-ஆம் ஆண்டில், இந்த திட்டம் நிறைவுபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.