Random image

எழுவரை விடுதலை செய்ய வேண்டும்: அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கு கைதிகள் எழுவரை விடுதலை செய்ய வேண்டும் என்றும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் எழுவரின் விடுதலை குறித்து தமிழக அரசு முடிவெடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த நிலையில் இன்று கூடும் அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்து முடிவு எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் அமைச்சரவை கூட்டம் துவங்கியது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் உட்பட அமைச்சர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

தற்போது கூட்டத்தில்  முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் எழுவரை  விடுதலை செய்ய வேண்டும் என்று  தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.

மேலும்,  சென்னை சென்ட்ரல் ரயில் நிலைத்திற்கு எம் ஜி ஆர் பெயர் சூட்ட மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவது என்றும், தமிழக முன்னாள் முதல்வர்கள்  அண்ணா மற்றும் ஜெயலலிதாவுக்கு  பாரத் ரத்னா விருது வழங்க வேண்டும் என்றும் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.