டில்லி

தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் நிர்ணயம் செய்யும் சட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.  இதனால் சுமார் 4 கோடி பேர் பயனடைவார்கள்

அரசின் தொழில் கொள்கைகளில் ஒன்றான குறைந்த பட்ச ஊதிய நிர்ணய சட்டம் இன்று அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டது. தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்ற கூட்டத்தில் இந்த மசோத சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்படும் என தெரிகிறது.

இந்த் சட்டப்படி குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ 18000 நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.  அனைத்து தொழில்களையும் ஊழியர்களையும் கட்டுப்படுத்தும்படி இந்த சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் சுமார் 4 கோடி பேர் பயனடைவார்கள்.

தற்போதுள்ள சட்டம் ரூ 18000 க்கு மேல் மாத வருமானம் பெறுபவர்களையும், மற்றும் அனத்து தொழில்களையும் கட்டுப்படுத்தாது.  மேலும் ஒரு சில தொழில்கள் இந்த சட்டத்திற்கு அப்பாற்பட்டவை என குறிப்பிடப் பட்டுள்ளது   இந்த புதிய திட்டம் அமுலுக்கு வந்த பின் இதற்கு முந்திய சட்டங்கள் அனைத்தும் செல்லாதவை ஆகி விடும்.

மேலும் தங்கப் பத்திரத்தில் முதலீடு செய்வது பற்றியும் சில திருத்தங்கள் அமைச்சரவையின் ஒப்புதலை பெறப்பட்டுள்ளது.  தங்கப் பத்திரத்தில் முதலீடு செய்ய மக்கள் ஆர்வம் காட்டாததை அடுத்து இந்த திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.  இதற்கு முன்பு அதிகபட்ச முதலீடு 500கிராமாக இருந்தது தற்போது 4 கிலோவாக உயர்த்தப்பட்டுள்ளது.  இதே போல இந்து அண்டிவைடட் ஃபேமிலிக்கும் டிரஸ்டுகளுக்கும் உச்சவரம்பு 20 கிலோவாக உயர்த்தப்பட்டுள்ளது.

தங்கப் பத்திர முதலீட்டில் அரசு எதிர்பார்த்த ரூ 15000 கோடிக்கு பதிலாக சென்ற வருடம் ரூ 10000 கோடி மட்டுமே முதலீடு செய்யப்பட்டது. அதேபோல இந்த வருடம் இதுவரை ரூ.4679 கோடி மட்டுமே முதலீடு செய்யப்பட்டுள்ளது.