சென்னை,

ன்று மாலை தமிழக அமைச்சரவை கூடுகிறது.

ஜல்லிக்கட்டு போராட்டம் காரணமாக டெல்லி சென்று பிரதமரை சந்தித்த முதல்வர், தமிழக அரசு மூலம் அவசர சட்டம் இயற்றுவது குறித்து சட்டநிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இன்று மதியம் 12. மணிக்கு சென்னை திரும்பும் தமிழக முதல்வர் பன்னீர்செல்வம், அவசர சட்டம் குறித்து தமிழக அமைச்சரவையை கூட்டி ஆலோசனை செய்ய இருக்கிறார்.

ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் இயற்ற முடியாது என்று மத்தியஅரசு கைவிரித்துவிட்ட நிலையில், தமிழக அரசே சட்டம் இயற்றலாம் என்று மத்திய அரசின் வழக்கறிஞர் முகுல் ரோத்தகி மற்றும் முன்னாள் சுப்ரீம்கோர்ட்டு நீதிபதி கட்ஜு போன்றவர்கள் கூறி வருகின்றனர்.

இதன் காரணமாக டெல்லியில் சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து, சட்ட முன்வடிவு தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், இன்னும் ஓரிரு நாட்களில் அதற்கான அனுமதி குடியரசு தலைவரை சந்தித்து பெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதற்கு ஏதுவாக இன்று மாலை தமிழக அமைச்சர்களின் அவசர கூட்டம் தலைமை செயலகத்தில் கூட இருக்கிறது. இதில் அவசர சட்டத்திற்கு அனுமதி பெறப்படும் என தெரிகிறது.

எனவே, அவசர சட்டம் கொண்டு வந்த மறுநாளே, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடக்கும்.

‘காளைகள் ஓடும். தமிழக இளைஞர்கள் தங்கள் வீரத்தை காண்பிப்பார்கள். என்பது நிச்சயம்.