நாளை கூடுகிறது மத்திய அமைச்சரவை கூட்டம்: கொரோனா, நிசார்கா குறித்து முக்கிய ஆலோசனை

டெல்லி: பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.

பிரதமர் மோடி தலைமையில் நாளை காலை 11 மணியளவில் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில்  கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், பருவமழை, நிசார்கா புயல், முன் எச்சரிக்கை நடவடிக்கைகள்  குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்று தெரிகிறது.

மேலும், 8ம் தேதி சில தளர்வுகள் அனுமதிக்கப்படும் என அறிவித்த நிலையில் அதன் வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து பின்னர் விரிவாக அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

கார்ட்டூன் கேலரி