கேபிள் டிவி கட்டணம் உயர்வு வழக்கு: டிராய் 3ந்தேதிக்குள் பதில் அளிக்க உயர்நீதி மன்றம் உத்தரவு

சென்னை:

நாடு முழுவதும் நாளை (29-ம் தேதி) முதல், ஒளிபரப்பாகும் கேபிள் டிவி, டி.டி.ஹெச். சேனல்கள் பார்ப்பதற்கான கட்டணங்களை அதிரடியாக டிராய் உயர்த்தி உள்ளது.

இதை எதித்த்து சென்னை மெட்ரோ கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில்  வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விசாரணையை தொடர்ந்து இதுகுறித்து வரும் ஜனவரி 3ந்தேதிக்குள் பதில் அளிக்க  மத்திய அரசு மற்றும் டிராய்க்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளது.

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் எனப்படும் டிராய், நாடு முழுவதும் கேபிள் டிவி கட்டணங்களை அதிரடியாக உயர்த்தி உள்ளது.

குறைந்த பட்ச கட்டணமாக மாதம் ஒன்றுக்கு ரூ.153.40 பைசா கட்ட வேண்டியது கட்டாய மாக்கப்பட்டு உள்ளது. அத்துடன் நாம் விரும்பி காணும் சேனல்களுக்கு தனித்தனி கட்டணம் கட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குறைந்தது ஒருவர் ரூ.200 வரை கேபிள் கட்டணம் செலுத்தப்பட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.  இது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக  கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கில் டிராய்க்கு நோட்டீஸ் அனுப்பிய உயர்நீதி மன்றம் விசாரணையை ஜனவரி 3-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

கேபிள் டிவி கட்டணம் உயர்வு வழக்கு: டிராய் 3ந்தேதிக்குள் பதில் அளிக்க உயர்நீதி மன்றம் உத்தரவு