கேபிள் டிவி ஆபரேட்டர்கள் நாளை வேலைநிறுத்தம்: பொதுமக்களுக்கு 3 மணி நேரம் டிவி பார்க்க தடை!

சென்னை:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், உடனே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் நாளை தமிழகம் முழுவதும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் வேலை நிறுத்தம் செய்கின்றனர்.

இதன் காரணமாக பிற்பகல் 3 மணி முதல் 6 மணி வரை கேபிள் மூலம் ஒளிபரப்பு  தடை செய்யப்படும். ஆனால் டிஷ் வைத்திருப்பவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.

காவிரி விவகாரத்தில் உச்சநீதி மன்ற உத்தரவுபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்நிலையில், தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

அதன்படி, தமிழகம் முழுவதும் நாளை மாலை 3 மணி முதல் 6 மணி வரை சுமார் 3மணி நேரம் கேபிள் டிவி ஒளிபரப்பை நிறுத்த முடிவு செய்து, தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்ய இருப்பதாக  கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் பொதுநல சங்கம் அறிவித்துள்ளது.