காவிரி விவகாரம் : தூர்தர்ஷன் சேனல்களை ஒளிபரப்ப கேபிள் ஆபரேட்டர்கள் மறுப்பு

துரை

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை மத்திய அரசின் தூர்தர்ஷன் சேனல்கள் எதையும் ஒளிப்பரப்ப மாட்டோம் என கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரியும் மாநிலம் எங்கும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.   இந்த போராட்டங்களில், மாணவர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சியினர்,  திரைப்படத் துறையினர் உட்பட பலரும் கலந்துக் கொள்கின்றனர்.

இந்த கோரிக்கைகளுக்காக தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கம் மதுரையில் ஆர்ப்பாட்டம் நிகழ்த்தியது.    மதுரை பெத்தானியா புரத்தில் கலந்துக் கொண்ட கேபிள் டிவி ஆபரேட்டர்கள் இன்று 2 மணி நேரம் கேபிள் சேவையை நிறுத்தி வைத்தனர்.

ஆர்ப்பாட்டத்தில்  பேசிய கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கத் தலைவர் சேகர், “காவிரி மேலாண்மை அமைக்காத மத்திய அரசை வன்மையாக கண்டிக்கிறோம்.   மேலும் எங்கள் இரு கோரிக்கைக்கள் நிறைவேறும் வரை மத்திய அரசின் தூர்தர்ஷன் சேனல்கள்  எதையும் ஒளிபரப்ப மாட்டோம்” என தெரிவித்துள்ளார்.