காணாமல் போன காஃபிடே அதிபர் தற்கொலையா? : காவல்துறை சந்தேகம்

ங்களூரு

ர்நாடகா முன்னாள் முதல்வர் எஸ் எம் கிருஷ்ணாவின் மருமகனும் கேஃப் காஃபிடே நிறுவன அதிபருமான வி ஜி சித்தார்த்தா தற்கொலை செய்துக் கொண்டதாக தகவல் வந்துள்ளது.

கர்நாடகாவின் முன்னாள் முதல்வரும் முன்னாள் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருமான எஸ் எம் கிருஷ்ணாவின் மருமகன் வி ஜி சித்தார்த்தா பிரபல தொழிலதிபர் ஆவார். இந்தியாவில் பல மாநிலங்களில் நடந்து வரும் கஃபே காஃபி டே என்னும் காஃபி ஷாப் நிறுவனங்களின் அமைப்பாளரும் உரிமையாளருமான சித்தார்த்தா மங்களூரு அருகே நேற்று இரவு முதல் காணவில்லை என கூறப்படுகிறது.

இவர் மங்களூரு அருகே உள்ள ஒரு பாலத்தில் கடைசியாக காணப்பட்டுள்ளார். இந்த பாலம் நேத்ராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுளது. இவருக்கு தொழிலில் மிகவும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் இவர் மீது மோசடிக் குற்றச்சாட்டுகளும் முன்பு எழுப்பப்பட்டு அதன் விளைவாக சோதனைகள் நடந்தன

இதனால் சித்தார்த்தா நேத்ராவதி ஆற்றில் குதித்து தற்கொலை செய்துக் கொண்டிருக்கலாம் என காவல் துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே காவல்துறையினர் நேத்ராவதி ஆற்றில் இறங்கி தீவிரமாக தேடி வருகின்றனர்.

கார்ட்டூன் கேலரி