மானிய விலை கேஸ் சிலிண்டர் வினியோகத்தில் முறைகேடு: நாடாளுமன்றத்தில் சிஏஜி அறிக்கை

டெல்லி: வறுமைக்கோட்டின் கீழுள்ளவர்களுக்கான மானிய விலை சமையல் கேஸ் சிலிண்டர் வினியோகத்தில், முறைகேடு நடந்திருப்பது சிஏஜி ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

இது தொடர்பாக சிஏஜி ஆய்வு ஒன்றை நடத்தியிருக்கிறது. அதில் ஒரு குறிப்பிட்ட மாதத்துக்குள் அதாவது 2016 மே மாதத்துக்கு முன்பு வரை இந்த மோசடிகள் அரங்கேறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

1300 பயனாளிகள் தினந்தோறும் 12 சிலிண்டர்களை பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 2,61 லட்சம் பயனாளிகள் இந்த முறைகேடை நிகழ்ந்திருக்கிறது.

7,000 பேர் ஒரு நாளைக்கு 4 சிலிண்டர்களை பெற்றுள்ளனர். 4,000 மக்கள் ஒரு நாளைக்கு 5 முறை சிலிண்டர்களை பயன்பாட்டுக்கு பெற்றிருக்கின்றனர். ஐஓசிஎல், எச்பிசிஎல் ஆகிய இரு எண்ணெய் நிறுவனங்களின் சிலிண்டர்கள் தான் இதில் சிக்கியிருக்கின்றன.

போதிய தொழில்நுட்பம், கண்காணிப்பு இல்லாமையே இதுபோன்ற முறைகேடுக்கு காரணமாக இருந்திருக்கிறது. இந்த முறைகேடுகளை எல்லாம் அறிக்கையாக தயாரித்துள்ள சிஏஜி, நாடாளுமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்திருக்கிறது.