டில்லி

ஜி எஸ் டி குறித்த முதல் சிஏஜி அறிக்கை நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017 ஆம் வருடம் ஜூலை மாதம் 1 ஆம் தேதி அன்று இந்தியாவில் ஜி எஸ் டி அமுல் செய்யப்பட்டது. அதன் பிறகு அந்த வரி விகிதங்கள் பல முறை மாற்றப்பட்டன. பல பொருட்களுக்கு ஜி எஸ் டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டன.  ஜி எஸ் டி கணக்கு அளிக்கும் முறைகளும் முதலில் மிகவும் குழப்பத்துடன் காணப்பட்டது. அதன் பிறகு அவற்றிலும் திருத்தம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த ஜி எஸ் டி குறித்த சிஏஜி (COMPTROLLER ND AUDITOR GENRAL) யின் முதல் அறிக்கை நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில்,  “ஜி எஸ் டி யின் முக்கிய அம்சங்களில் இன்வாய்ஸ்கள் இணைப்பு மிகவும் முக்கியமாகும். ஆனால் இது குறித்த விவரம் ஏதுவுமின்றி ஜிஎஸ்டி அமுலாக்கப்பட்டுள்ளது. பல மாதங்கள் கணக்குக்குப் பின்னரே இந்த விவரம் இணைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மாநிலங்களின் வரி வருமானம் மற்றும் மத்திய வரி வருமானம் இரண்டுமே பாதிக்கப்பட்டுள்ளது. ஜி எஸ் டி அமலாக்கம் செய்யப்பட்டு இரண்டாண்டுகள் ஆகியும் இன்னும் செலுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரியுடன் இன்வாய்ஸை ஒப்பிட  எவ்வித முறையும் இல்லை. இதனால் பல இடங்களில் செலுத்தாத ஜிஎஸ்டி வரியைத் திரும்பப் பெறும் முறைகேடுகள் நடந்துள்ளன

தற்போதுள்ள நிலையில் ஜி எஸ் டி கணக்கு அளிப்பில் மேலும் பல மாறுதல்கள் செய்ய வேண்டி உள்ளது. இதனால் வருமானத் துறை மற்றும் மறைமுக வரிகள் இயக்ககம் ஆகியவற்றின் இடையே போதுமான ஒருங்கிணைப்பு இல்லை  என்பது தெளிவாக தெரிந்துள்ளது அது மட்டுமின்றி ஜி எஸ் டி வரியில் மாநிலங்களுக்குத் தர வேண்டிய பங்கு குறித்து ஒரு சீரான திட்டமின்றி ஜிஎஸ்டி அமுலாக்கப்பட்டுள்ளது.

இதனால் சரியான முன்னேற்பாடு மற்றும் திட்டமிடுதல் இன்றி ஜிஎஸ்டி அமலாக்கம் நடந்துள்ளது தெளிவாகி உள்ளது. இதனால் மிகவும் குறைந்த வரி வருமானம் கிடைத்துள்ளது. இந்த வரி வருமானக் குறைவு 10% வரை உள்ளது”  என குறிப்பிடப்பட்டுள்ளது.