கொல்கத்தா:

மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற சிஏஏக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்ட போலந்து நாட்டு மாணவர், நாட்டை விட்டு வெளியேற மத்தியஅரசு உத்தரவிட்ட நிலையில், அதற்கு கொல்கத்தா உயர்நீதி மன்றம் தடை விதித்துள்ளது.

கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பு படித்து வருபவர், போலந்து நாட்டைச் சேர்ந்த கமில் சிய்ட்சின்ஸ்கி. இவர் அந்த பல்கலைக்காகத்தில்  கடந்த மாதம் 14-ந்தேதி, நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த, மத்தியஅரசு, அவரை 14 நாட்களுக்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நிலையில், மத்தியஅரசின் நோட்டீசுக்கு  தடை விதிக்கக்கோரி கமில், கொல்கத்தா உயர்நீதி மன்றத்தில்  மனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த நீதிபதி சப்யாசாச்சி பட்டாச்சார்யா, மத்திய அரசின் நோட்டீசை ரத்து உத்தரவிட்டார். மேலும், நோட்டீசை செயல்படுத்த வேண்டாம் என்றும் அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்தார்.