நடிகர் சித்தார்த் எதையும் ஒளிவுமறைவின்றி (குறிப்பாக அரசியலவாதிகளுக்கு எதிராக) வெளிப்படையாக விமர்சிப்பதற்கு பெயர்பெற்றவர் என்பது நம்மில் பலருக்குத் தெரியும்.

அவர் தற்போது, நரேந்திரமோடியைப் பற்றி வெளிவந்துள்ள வாழ்க்கைக் குறிப்பு படமான “பிரதமர் நரேந்திர மோடி” என்பது பற்றி ஒரு கிண்டலான விமர்சனத்தை வைத்துள்ளார்.

அதாவது, இந்தப் படத்தின் ட்ரெய்லரில், “பிரதமர் மோடி எப்படி தன்னந்தனியாக நின்று, தனது ஒரே கையால், இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை துடைத்தெறிந்தார் என்பது காட்டப்படவில்லை என நக்கலடித்துள்ளார்”.

இவர் ஏற்கனவே, 2ஜி ஊழல், கோத்ரா ரயில் எரிப்பு, 1984 சீக்கியர் படுகொலை, காமன்வெல்த் விளையாட்டு ஊழல் ஆகியவை குறித்து கவலையற்ற விமர்சனங்களை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘உலகையே குலுங்கச் செய்யுமளவு தீர்க்கப்படாத குற்ற வரலாற்றைக் கொண்ட அப்பாவிகளின் நாடு நம்முடையது’ என்பது இவரின் புகழ்பெற்ற வாசகம்.

அரசியல் தலைவர்களைப் புகழந்து, அவர்களின் தவறுகளை மறைத்து எடுக்கப்படும் திரைப்படங்கள் குறித்து இவர் தனது கவலையை தெரிவித்துள்ளார்.

தூய்மையான அரசியல்வாதியாக காட்டிக்கொள்ளும் நடிகர் கமல்ஹாசன் போன்றவர்கள் நரேந்திர மோடியை விமர்சிக்க தயங்கும்போது, சித்தார்த் போன்ற சிறிய நடிகர்கள், பல பெரிய அரசியல்வாதிகளை பயமின்றி விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

– மதுரை மாயாண்டி