கே.டி.கம்பைன்ஸ் சார்பில் ஆர். கபிலா தயாரிப்பில் சஸ்பென்ஸ் திரில்லர் கலந்த திரைப்படமாக உருவாகியுள்ள படம் “கால்டாக்ஸி”.தமிழகத்தில் கால்டாக்ஸி டிரைவர்கள் தொடர் கொலைகள் செய்யப்படுவதின் பின்னணியில் உள்ள உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகி வரும் படம் இது .

இப்படத்தில் சந்தோஷ் சரவணன், அஸ்வினி , நான் கடவுள் ராஜேந்திரன், மதன்பாப், இயக்குனர் ஈ.ராமதாஸ், ஆர்த்தி கணேஷ், பசங்க சிவகுமார், முத்துராமன் பெல்லி முரளி, சந்திரமௌலி, போராளி திலீபன், சேரன்ராஜ், அஞ்சலிதேவி மற்றும் பலர் நடிக்கின்றனர்.

நடனம்- இராபர்ட், இருசன்; ஸ்டண்ட்- எஸ்.ஆர்.ஹரிமுருகன், எடிட்டிங்- டேவிட் அஜய், ஒளிப்பதிவு- எம்.ஏ.ராஜதுரை, பாடல்கள், இசை- பாணன், கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் பா.பாண்டியன்.

இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டுள்ளது படக்குழு.