Random image

லிட்டர் ரூ.3 ஆயிரம்: மருத்துவ குணங்கள் உள்ள ஒட்டகப்பால் விற்பனை அமோகம்

டில்லி:

ந்தியாவில் சமீப காலமாக ஒட்டகப்பால் விற்பனை அதிகரித்து வருகிறது. ஒரு லிட்டர் ஒட்டகப் பாலின் விலை  ரூ.3  ஆயிரத்துக்கு விற்பைனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

ஒட்டப்பாலின் விலை உயர்வு காரணமாக அதை விற்பனை செய்து வரும் ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநில பால் வியாபாரிகள் மகிழச்சி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

மருத்துவ குணங்கள் உள்ள ஒட்டகப்பால் இந்தியாவில் ராஜஸ்தான் மற்றும் சூரத்தில் அதிக அளவு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ராஜஸ்தானில் பிகானிர் பகுதியில் ஒட்டக்கப்பால் சேமிக்க தனி பண்ணையே அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஒட்டகப்பாலை ஆத்விக் புட்ஸ் நிறுவனம் பெற்று, கெட்டுப்போகாத வகையில் பேங்கிங் செய்து விற்பனை செய்து வருகிறது. இந்த பால் 200 மிலி, 500 மிலி என்று டெட்ரா பேக்கில் அடைக்கப்பட்டுவிற்பனை செய்யப்பட்டு வருவதாகவும்,அமேஷன் போன்ற ஆன்லைன் தளம் மூலம விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், இந்த விற்பனை கடந்த ஓராண்டாகவே நடைபெற்று வருவதாகவும் அந்த நிறுவன அதிகாரி தெரிவித்து உள்ளர்.

ஒட்டகப்பால் நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் லிட்டர் விற்பனை செய்யப்பட்டு வருவதாகம்,  150 பால் விற்பனையாளர்கள் ஒட்டகப்பால் சப்ளை செய்து வருவதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்து உள்ளது.

ஒட்டக பாலின் விலை அதிகமாக இருந்தால், தற்காலங்களில் அதன் விற்பனை அதிகரித்து வருவதாகவும், ஒட்டக் பாலில் நோய் தீர்க்கும் மருந்துகள் இருப்பதாக கருதப்படுவதில் அதன் விற்பைன அதிகரிப்பதாக அந்த நிறுவன  கூறி உள்ளார்.

ஏற்கனவே அரபுநாடுகளில் வசிப்பவர்கள்  ஒட்டக்ப்பால் அருந்தி வரும் நிலையில், தற்போது இந்தியாவிலும் அதன் விற்பனை சூடுபிடித்து உள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளில் ஒட்டகப் பால் விற்பனை 111 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளதாக தேசிய ஒட்டக ஆராய்ச்சி  மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த 2013-14 ஆண்டை காட்டிலும் 2017-18 ஆண்டில் ஒட்டகப் பாலின் தேவை மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதனால் கறந்த  மற்றும் பதப்படுத்தப்பட்ட ஒட்டகப் பாலின் விற்பனையும் அதிகரித்துள்ளது.

மாட்டுப் பால், ஆட்டுப்பால் போல் இல்லாமல்,  ஒட்டகப் பால் மருத்துவ நலன்களுக்காக உபயோகப்படுத்தப்படுகிறது. இந்த பாலில் அதிகளவில் புரதம், வைட்டமின்கள்  மற்றும் ஆண்டி ஆக்சிடன்டுகள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதனால், இந்த பாலை குடிப்பதன் மூலம் நீரிழிவு, ஆட்டிசம்,  வாதநோய்கள் கட்டுப்படுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கடந்த நான்கு  ஆண்டுகளில் இதன் விற்பனை மூலம் வருவாயும் அதிகரித்துள்ளது. இருப்பினும், இந்த பாலை ஏற்றுமதி செய்ய இயலாத நிலை  காணப்படுகிறது. தற்போது . நாடு முழுவதும் 4 லட்சம் ஒட்டகங்கள் உள்ளன. அவற்றில் 82  சதவீதம் ராஜஸ்தானில் உள்ளன. இதன் எண்ணிக்கையும் வேகமாக குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ஒட்டக பால் தொடர்ந்து அருந்துவதின் மூலம், மன இறுக்கம், ,நீரிழிவு, மூட்டு வலி மற்றும் நோய்த்தடுப்பு தொடர்பான நோய்கள் குணமாகி வருவதாக கூறப்படுகிறது.

குழந்தைகளின் ஆட்டிசம் நோய்க்கு ஒட்டகப்பால் தான் எதிர்ப்பு மருந்து என்று மருத்துவர்கள் ஆய்வில் கண்டறிந்துள்ளனர். குழந்தைகளைப் பாதிக்கும் மூளை வளர்ச்சி மற்றும் மனஅழுத்த நோய்க்கு ஒட்டகப் பால் குணப்படுத்தும் என சிறப்புக் குழந்தைகளுக்கான ‘பாபா பரீத்’ மையமும் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த டாக்டர் ரெவின் யாகிலும் இணைந்து தெரிவித்துள்ளனர்.

ஒட்டகப்பால் மூளை வளர்ச்சியின்மை, பரம்பரை நோயை குணப்படுத்தும். உடல் வளர்ச்சி மற்றும் எடையை அதிகரிக்கும். எதிர்ப்பு சக்தியை கொடுக்கும்.ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இருதயத்தில் கொழுப்பு படியவிடாது என்று பல வகையான நோய்களுக்கு அருமருந்தாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், இதுபோன்று நோய்களை குணப்படுத்துவதாக  இதுவரை எந்த ஆராய்ச்சி முடிவும் உறுதிபடுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.