டில்லி:

6வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நாளை மறுதினம் (12ந்தேதி) நடைபெற உள்ள நிலையில், இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்வு பெறுகிறது.

17வது மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த  மார்ச் மாதம் 5ந்தேதி  தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா  அறிவித்தார்.  நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என  அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வாக்குப்பதிவான பணிகள் நடைபெற்று வந்த நிலையில், இதுவரை 5 கட்ட வாக்குப்பதிவுகள் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று முடிந்துள்ளது.

இந்த நிலையில், 6வது கட்ட தேர்தல் வரும் 12ந்தேதி (நாளை மறுதினம்) 7 மாநிலங்களை சேர்ந்த 59 தொகுதிகளில் நடைபெற உள்ளது. இந்த தொகுதிகளில் இன்று மாலையுடன் அனல் பறந்த தேர்தல் பிரசாரங்கள் முடிவடைகிறது.

 தேர்தல் நடைபெறும் மாநிலங்கள்:

பீகார் – 8 தொகுதிகள்,

அரியானா – 10 தொகுதிகள்,

ஜார்கன்ட் – 4 தொகுதிகள்,

மத்திய பிரதேசம்- 8 தொகுதிகள்,

உ.பி. – 14 தொகுதிகள், 

மேற்கு வங்கம் – 8 தொகுதிகள்,

டில்லி-என்சிஆர் – 7 தொகுதிகள்

மொத்தம் 59 தொகுதிகள்

மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் நிலையில் 59 தொகுதிகளுக்கான ஆறாம் கட்டத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது.