காத்மண்டு: இந்திய ராணுவத்தில் இணையும் நேபாள இளைஞர்களின் மனதை மாற்றும் விதமாக, அந்நாட்டில் விழ்ப்புணர்வு பிரச்சாரங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இது, இருநாட்டு உறவில் இன்னும் விரிசலை அதிகரித்துள்ளது.

இந்திய ராணுவத்தில் உள்ள கூர்கா ரெஜிமென்ட் பெயர்பெற்றதாகும். இந்திய ராணுவத்தில் மட்டுமல்லாமல், பிரிட்டிஷ் ராணுவத்திலும்வட கூர்கா ரெஜிமென்ட்டுகள் உண்டு.

நேபாளத்தில், கூர்க்கா சமூகத்தில், காஸ்(செத்ரி), குருங், லிம்புஸ் மற்றும் ரேய்ஸ் என்ற 4 பிரிவுகள் உண்டு.

இந்திய ராணுவத்தில், நேபாளிகள் இடம்பெறும் வகையில், கடந்த 1947ம் ஆண்டு, இந்தியா – பிரிட்டன் – நேபாளம் இடையே முத்தரப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

ஆனால், தற்போது இந்தியா – நேபாளம் இடையே உறவு மோசமடைந்துள்ள நிலையில், இந்த ஒப்பந்தம் தேவையற்ற ஒன்றென நேபாளம் தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்திய ராணுவத்தில் இணைவதற்கு, நேபாள இளைஞர்களை தூண்டுவது என்து என்பது குறித்து ஆய்வு நடத்த, காத்மண்டுவிலுள்ள ஒரு அரசுசாரா நிறுவனத்திற்கு சீன அரசு 12.7 லட்சம் நேபாள பணத்தை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், கலை நிகழ்ச்சிகளின் மூலமாக, நேபாள மக்கள் மத்தியில், இந்தியாவுக்கு எதிரான மனநிலையைக் கட்டமைப்பது மற்றும் இந்திய ராணுவத்தில் இணைவதை தடுப்பது ஆகிய நடவடிக்கைகள் சில அமைப்புகள் ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.