இன்று மாலை முதல் 3 மாவட்டங்களில் கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தம்

சென்னை

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று மாலை முதல் கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் குடிநீர் தயாரிக்கும் தனியார் உற்பத்தியாளர்களுக்கு நிலத்தடி நீரை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. நிலத்தடி நீரை தவிர வேறு ஆதாரம் இல்லாததால் இந்த குடிநீர் உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். எனவே நிலத்தடி நீர் விதிக்க தடை விதிக்கக் கூடாது என கோரிக்கை விடுத்தனர்.

அந்த கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்காததால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் கடந்த 2 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கனிம வள பிரிவில் இருந்து நிலத்தடி நீரை நீக்கி தங்களுக்கு நீர் எடுக்க அனுமதி கோரி இந்த போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மூன்று மாவட்டங்களிலும் மொத்தம் 4500 லாரிகள் இயங்கவில்லை.

தற்போது இந்த மூன்று மாவட்டங்களில் இன்று மாலை முதல் இதே கோரிக்கையை வலியுறுத்தி கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தப்படு என உற்பத்தியாளர்கல் சங்கம் அறிவித்துள்ளது. முதற்கட்டமாக மூன்று மாவட்டங்களில் உள்ள 450 நிறுவனங்களில் 300 நிறுவனங்களில் உற்பத்தி நிறுத்தப் பட்டுள்ளது.

பெரும்பாலான மக்கள் தற்போது கேன் குடிநீரையே நம்பி உள்ளனர். எனவே இந்த வேலை நிறுத்தம் தொடங்கினால் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் என மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.