புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இலவச அரிசி வழங்க முடியுமா? அரசு பதில் அளிக்க உத்தரவு

சென்னை:

மிழகத்தில் குடும்ப அட்டை இல்லாத புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இலவச அரிசி வழங்க முடியுமா என்பத குறித்து பதிலளிக்க தமிழகஅரசுக்கு உயர்நீதி மன்றம்  உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது.  இதனால் தொழிலாளர்கள் வேலையின்றி அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச அரிசி உள்பட பருப்பு மற்றும் சமையல் எண்ணை தமிழகஅரசால் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த இலவச உணவுப்பொருட்கள் , வாழ்வாதாரத்தை தேடி வெளி மாநிலங்களில் இருந்து வந்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கு கிடைப்பதில்லை. இதனால் அவர்கள் உணவுப் பொருட்களை கடையில் காசு கொடுத்தும் வாங்கும் நிலையே உள்ளது.

இந்த நிலையில், குடும்ப அட்டை இல்லாத புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் இலவச ரேசன் பொருட்கள் வழங்க உத்தரவிடக்கோரி பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம், இதுகுறித்து தமிழகஅரசு பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது.