புதுடெல்லி:

ங்கை நீர் அல்லது கங்கை ஆற்றில் இருந்து வரும் நீர் கொரோனாவை குணப்படுத்தக்கூடும் என்ற கோட்பாடு குறித்து ஆய்வு செய்ய நரேந்திர மோடி தலைமையிலான அரசின் கோரிக்கையை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) நிராகரித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஐ.சி.எம்.ஆர் அதிகாரி ஒருவர், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதால், கங்கை நீரிலால் கொரோனாவை குணப்படுத்த முடியுமா என்ற ஆய்வு செய்ய மோடி அரசு விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த சூழ்நிலையில் இதுபோன்ற ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு நேரத்தை வீணாக்க நாங்கள் விரும்பவில்லை என்றும் அவர் கூறினார்.

கடந்த மாதம் தனது கடிதத்தில், கொரோனாவை குணப்படுத்தக்கூடிய கங்கையின் நீரில் பாக்டீரியோபேஜ் எனப்படும் ‘நிஞ்ஜா வைரஸ்’ இருப்பதை தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்த அத்துல்யா கங்கா என்பவர் மேற்கோள் காட்டியிருந்தார். பாக்டீரியோபேஜ் ஒரு சிறப்பு வகை வைரஸ் ஆகும், இது தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும் என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் குணமாக செயல்படுவதற்கான சாத்தியக்கூறு குறித்து ஆய்வு செய்ய தன்னார்வ தொண்டு நிறுவனம் ஏப்ரல் 3 ம் தேதி அரசுக்கு கோரிக்கை விடுத்தது. இந்த கடிதத்தின் நகலை அமைச்சகம் மற்றும் பிரதமர் அலுவலகத்திற்கு (PMO) அனுப்பியது.

இதையடுத்து தேசிய தூய்மையான கங்கா, மோடி அரசாங்கத்தின் லட்சிய நமாமி கங்கே திட்டத்தை நிர்வகிக்கும் துறை, பின்னர் மருத்துவ பரிசோதனையை கோரி ஏப்ரல் 30 அன்று ஐ.சி.எம்.ஆருக்கு கடிதம் எழுதியது.

ஐ.சி.எம்.ஆர் பின்னர் இந்த யோசனையைப் பற்றி விவாதிக்க கூட்டத்தை நடத்தியது, இந்த கூட்டத்திற்கு பின்னர், ஆய்வு குறித்த கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டது.

இதுகுறித்து ஐசிஎம்ஆர் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், இதுபோன்ற ஆராய்ச்சிக்காக ஜல் சக்தி அமைச்சகத்திடமிருந்து எங்களுக்கு ஒரு கடிதம் வந்தது. ஐ.சி.எம்.ஆரின் நிபுணர்களும் இந்த விஷயத்தில் ஆலோசனை நடத்தினோம். இது தொடர்பாக நாங்கள் நிச்சயமாக அவர்களுக்கு உதவுவோம் என்றும் ஐசிஎம்ஆர் அதிகாரி கூறினார்.

“இப்போது வரை பிளாஸ்மா சிகிச்சையை கொரோனா சிகிச்சைக்கான ஒரு பரிசோதனையாக நாங்கள் கருதுகிறோம், பின்னர் கங்கையின் நீரில் காணப்படும் பாக்டீரியோஃபேஜ் என்ற வைரஸை ஒரு சிகிச்சையாக எப்படி விரைவாக ஏற்றுக்கொள்வது? இப்போது, ​​கங்கையின் நீரில் காணப்படும் வைரஸ் உண்மையில் கொரோனா வைரஸ் நோயை எதிர்த்துப் போராட முடியும் என்ற வாதத்தில் எந்த உண்மையும் இல்லை ”என்று அந்த அதிகாரி மேலும் கூறினார். இருந்தாலும், இந்த விவகாரத்தில் அமைச்சகம் முயற்சியை மேற்கொண்டால், அதற்கு ஐ.சி.எம்.ஆர் அதன் உதவிகளை வழங்கும் என்றும் அவர் கூறினார்.