தமிழ் சினிமாவில் விட்ட இடத்தை பிடிப்பாரா கீர்த்தி..

டிகை கீர்த்தி சுரேஷ் தமிழில் தென்றலாக வந்து அடுத்தடுத்து டாப் ஹீரோக்களுடன் ஜோடிபோட்டு முன்னணி இடத்தை பிடித்தார். அதேவேகத்தில் இந்தியிலும் நுழைந்து கலக்கலாம் என்று எண்ணினார். இந்தியில் ஒரு படத்தில் நடிக்கவும் ஒப்புக்கொண்டார். இதனால் தமிழ். தெலங்கு படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். ஆனால் எதிர்பார்த்தற்க்கு மாறாக இந்தி பட வாய்ப்பு கைநழுவியது, இதற்கிடையில் உடல் எடை குறைக்கிறேன் என்று ஆளே அடையாளம் காண முடியாத அளவுக்கு ஒல்லியானார்.

 

ஒல்லியான பிறகு அவர் நடித்த பெண்குயின் படம் ஒடிடி தளத்தில்தான் வெளியானது. இதனால் அவருக்கான வரவேற்பை கணிக்க முடியவில்லை. இதற்கிடையில் ராஷ்மிகா மந்தன்னா, பூஜா ஹெக்டே தென்னிந்திய ரசிகர்களை கவர்ந்திருக்கின்றனர்.
தமிழில் ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார் கீர்த்தி. அதில் ஏற்கனவே குஷ்பு, மீனா, நயந்தாரா என் பெரிய நடிகைகள் நடிக்கின்றனர் அவர்களை கீர்த்து எப்படி சமாளித்து பெயர் வாங்கப்போகிறார் என்பது கேள்விக்குறியாக உள்ளது. தற்போது தெலுங்கில் நிதின் நடிக்கும் பவர் பேட்ட என்ற படத்தில் நடிக்க உள்ளார். அங்குள்ள போட்டியை எப்படி சமாளிக்கப்போகிறார், விட்ட இடத்தை மீண்டும் பிடிப்பாரா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்