கமல் பிரசாரத்துக்கு தடை விதிக்க முடியாது: மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதி மன்றம்

மதுரை:

ந்து தீவிரவாதம் குறித்து பேசிய கமலுக்கு எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், அவர் தேர்தல் பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று உயர்நீதி மன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி,  கமல்ஹாசனின் தேர்தல் பிரசாரத்துக்கு  தடை விதிக்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

அரவக்குறிச்சி தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் நாதுராம் கோட்சே என்று தெரிவித்தார். இவருடைய பேச்சு தேசியள வில் சர்ச்சையை கிளப்பி உள்ளது. கமலுக்கு பாஜக உள்பட இந்து அமைப்புகள் கடுமையான கண்டனங்களை தெரிவித்து உள்ளன. கமலின் பேச்சுக்கு எதிராக அஸ்வினி அஸ்வினி உபாத்யா டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  ஆனால், அதை  நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இந்த நிலையில்,  வழக்கறிஞர் சரவணன் என்பவர் கமல்ஹாசனின் தேர்தல் பிரசாரத்துக்கு  தடைக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீட்டார்.

ஆனால், கமலின் பிரசாரத்திற்கு தடை விதிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு மட்டுமே உள்ளது. தேர்தல் ஆணையம் தான் இந்த விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என்று கூறி நீதிபதிகள், சரவணனின் மனுவை நிராகரித்துவிட்டனர்.  எஏற்கனவே டெல்லி நீதிமன்றம் வழங்கிய உத்தரவை கமலின் தேர்தல் டபிரசாரத்துக்கு  தடை விதிக்க முடியாது எனவும் தங்களது உத்தரவின் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.