பேரறிவாளனை விடுவிக்க முடியாது: உச்சநீதிமன்றம்

டில்லி,

ற்போதைய சூழலில் பேரறிவாளனை சிறையிலிருந்து விடுவிக்க முடியாது என உச்சநீதிமன்றம் கூறி உள்ளது.

ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளன், தனக்கு விதிக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனையை நீக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றத்தில் வழக்கு  தாக்கல் செய்திருந்தார்.

அதில்,ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விசாரணை ஆணையத்தின் விசாரணையில் குளறுபடிகள் இருப்பதாகவும்,  ராஜீவ் கொலை தொடர்பாக, சர்வதேச தொடர்புகளை சிபிஐ விசாரிக்க வில்லை என்றும், தனது வாக்குமூலத்தை சரியாக பதிவு செய்யாததாலேயே சிறைத் தண்டனையை அனுபவித்துவர நேர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்த வழக்கின்  இன்றைய விசாரணையின் போது பேரறிவாளனை விடுதலை செய்ய சிபிஐ தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தற்போதைய சூழலில் பேரறிவாளனை சிறை யிலிருந்து விடுவிக்க முடியாது என  கூறினார். மேலும், சிபிஐ சிறப்புக்குழு விசாரணை அறிக்கையை பேரறிவாளன் தரப்பிற்கு அளிக்குமாறும் அவர் உத்தரவிட்டார்.