கோடை காலத்தில் அசைவம் சாப்பிடலாமா?’

நாம் வாழும் ஊரின் பருவநிலைக்கு ஏற்றது போல் உணவுகளை நாம் தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். மழைக்காலம்,பனிக்காலம்,கோடைக்காலம் என்று  மூன்று விதமாக நம் நாட்டின் பருவநிலையை நாம் பிரிக்கலாம். அந்தந்த காலநிலைக்கு ஏற்றது போல் நம் உணவுகளை எடுத்துக் கொண்டோம் என்றால் உடல் உபாதைகளைத் தவிர்க்கலாம். ஆனால், நம்மில் பலபேர் அதை பின்பற்றுவது கிடையாது. இப்போது நாம் கோடைகாலத்தில் அசைவம் எடுத்துக் கொள்ளலாமா?’’ என்பதைப் பார்க்கலாம்.

சுட்டெரிக்கும் இந்த கோடையில் அசைவ உணவுகளை முடிந்தவரை தவிர்ப்பதே நல்லது. அசைவ உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதால், ரத்தத்தில் கெட்ட கொழுப்பின் அளவை அதிகரிக்கச் செய்து இதயநோய் வருவதற்கான சூழலையை உண்டாக்கும்.
அசைவம் என்றாலே அதிகமானோர் எடுத்துக் கொள்வது பிராய்லர் கோழி. அதுவும் பெரும்பலான நடுத்தர குடும்பத்தில் ஞாயிறு விடுமுறை என்றாலே கோழிக்குத்தான் முதல் இடம் அதன் விலை சற்று குறைவாக இருப்பதால் பிராய்லர் கோழிகளையே நாடுகின்றனர். இது அவர்களது ஆரோக்கியத்துக்கு ஏற்றது கிடையாது.  கோடைகாலத்தில் மட்டுமின்றி எப்போதும் எடுத்துக் கொள்ளக் கூடாது. நாட்டுக்கோழி சாப்பிடலாம். அதுவும் கோடைகலாத்தில் தவிர்த்துவிட வேண்டும்.

கோழிக்கறி பொதுவாகவே உடலின் சூட்டை அதிகப்படுத்தும் தன்மை கொண்டது. ஏனென்றால் இது வெயில் காலத்தில் ஏற்படும் செரிமான கோளாறால் மலச்சிக்கலும் வயிற்றுப் பிரசனையை உண்டாக்கும்.

கோடையில், அசைவம் சாப்பிடாமல் என்னால் இருக்கவே முடியாது என்பவராக இருந்தால்’ மீன் சாப்பிடலாம். இது அந்த அளவுக்கு கெடுதலை ஏற்படுத்தாது. அதுவும் மசாலக்களை குறைவாக பயனபடுத்தப்பட்ட குழம்பு எடுத்துக் கொள்ளலாம்.

நண்டு முழுவதுமாக தவிர்த்துவிட வேண்டும். ஏனெனில் அது உடலில் எரிச்சலை உண்டாக்கும். மற்றும் அலர்ஜி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

மேலே சொன்னது போலவே இறாலையும் தவிர்ப்பது நல்லது. நெத்திலி போன்ற மீன்களையும்,  முட்டையையும் எடுத்துக் கொள்ளலாம்.

 

கார்ட்டூன் கேலரி