நெட்டிசன்

ம.தி.மு.க. பிரமுகர் வல்லம் பசீர் அவர்களின் முகநூல் பதிவு: எல்.கணேசனுக்கு கொடுக்கப்பட்ட தொகை , அதன் பின்னர் மாவட்ட செயலாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகை . திருவாரூர் தியாகபாரிக்கு பணம் கை மாறியது .

மதிமுக கொடுத்த காரிலேயே பணப்பெட்டியை வெற்றிலைப்பெட்டி (அதான் அவருக்கு எங்க ஊர்ல பெயர் ) வைத்து கொண்டு ஒவ்வொரு ஒன்றிய செயலாளரையா போய் விலை பேசி நான்கு ஒன்றிய செயலாளரை அழைத்து கொண்டு போய் பத்திரிக்கைக்கு பேட்டி கொடுத்தது

தஞ்சையில் கூட்டம் போட்டு கே.என்.நேரு ஏற்பாட்டில் ஆறு பஸில் திமுக ஆளை அழைத்து வந்து மதிமுக என்று கணக்கு காட்டியது . சேலத்தில் பொதுக்குழு என்ற பெயரில் வீரபாண்டியார் ஏற்பாட்டில் திமுக கூட்டத்தை கூட்டி மதிமுக பொதுக்குழு என்று ஊடகங்களுக்கு விளம்பரம் கொடுத்தது

யார் துரோகின்னு “துரோகி” சபாபதிமோகன் எழுதிய புக்கை எல்ஜி எழுத்துனாருன்னு சொல்லி திலகர் திடலில் துரை.முருகனை வைத்து அதற்க்கு பிரமாண்ட கூட்டம் நடத்தி நாலு மாவட்ட திமுக ஆட்களை அழைத்து வந்தது .

பத்து பைசா பிரயோசனம் இல்லாத எல்ஜிக்கே பத்து கோடி செலவு செய்தவர்கள் திமுகவினர் . அடுத்தவனை விமர்சிக்க ஒரு குறைத்தபட்ச யோக்கிதை வேண்டாமா ?

இது எல்ஜிக்கு மட்டுமான கணக்கு . கண்ணப்பன் தொடங்கி மாசிலாமணி, சோமு, மணிமாறன் ஜோயல் வரை மதிமுகவை உடைக்க மட்டுமே இருநூறு கோடியை கொடுத்திருப்பார் திமுகவின் தற்குறி இளவரசர் .

கூச்சமே இல்லாமல் பணம் கொடுப்பதை பற்றி நீங்க பேசுவது தான் உச்சபட்ச வேடிக்கை.