டில்லி:

யோத்தி பிரச்னையை சுமுகமாக தீர்க்க நடுநிலையாளர்களை நியமிக்கலாமா?  என்று உச்சநீதி மன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதி மன்றம் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, நிலம் தொடர்பாக  6 வாரத்திற்குள் டாக்குமென்டுகளை மொழி பெயர்த்து  தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதி மன்றம் வழக்கை மார்ச் 5ந்தேதிக்கு தள்ளி வைத்தது.

உ.பி.மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இருந்த 2.77 ஏக்கர் நிலத்தை மனுதாரர்கள் சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 பிரிவினரும் பிரித்துக்கொள்ள அலகாபாத் உயர் நீதிமன்றம் யோசனை வழங்கியது. ஆனால் அதை ஏற்க மறுத்து உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் மீதான விசாரணை கடந்த ஆண்டே நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், நீதிபதிகள் மாற்றம் காரணமாக விசாரணை தாமதமாகி வந்தது. தற்போது, அயோத்தி வழக்கை விசாரிக்க  உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்தே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு  அமைக்கப்பட்டது.

இதற்கிடையில், மத்திய அரசு தரப்பில், ஜனவரி 29 ஜனவரி அன்று புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், சர்ச்சைக்குரிய இடம் தவிர மீதமுள்ள  67 ஏக்கர் கையகப்படுத்திய நிலத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும்  என்று கோரியிருந்தது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், அயோத்தி வழக்கு இன்று அரசியல் சாசன அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள்,  அயோத்தி விவகாரத்தை நிலபிரச்னையாக பார்க்கவில்லை மத நம்பிக்கை சார்ந்த விஷயமாக பார்க்கிறோம்.  இரண்டு மதங்கள் இடையே உள்ள பிரச்னையை சுமுகமாக தீர்க்கவே முயற்சிக்கிறோம்,  அயோத்தி பிரச்னையை சுமுகமாக தீர்க்க நடுநிலையாளர்களை நியமிக்கலாமா?  என்றும் கேள்வி எழுப்பி உள்ளது. அதைத் தொடர்ந்து வழக்கின் விசாரணையை மார்ச் 5ந்தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.

அது தொடர்பாக கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி, நிலம் தொடர்பான ஆவனங்கள் மொழி பெயர்க்கப்பட்டு 6 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அதை ஆராயந்த பிறகே, முடிவு எடுக்க முடியும் என்றும் கூறினார்.

இதற்கிடையில், அயோத்தி வழக்கு தொடர்பாக பாஜக மூத்த தலைவர்கள் சுப்பிரமணியன் சாமி, தாக்கல் செய்துள்ள மனுவில், அயோத்தி பிரச்சினையில் எந்த சமரசமும் கிடையாது என்றும்,  ராமரின் பிறந்த இடத்தில் பிரார்த்தனை செய்ய இந்துக்களுக்கு உரிமையைக் கொடுக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார்.

வழக்கின் விசாரணையின்போது கருத்து தெரிவித்த நீதிபதி பாப்டே,  இரு மதங்களுக்கு இடையே யான பிரச்சினையில் நடுநிலைக்கான ஒரு சதவீத வாய்ப்பு கிடைத்தாலும், நாங்கள் அதை ஒரு வாய்ப்பாகக் பயன்படுத்த வேண்டும்” என்று கூறினார்.

உச்சநீதி மன்றத்தின் நடுநிலையாளர் யோசனைக்கு வாதிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.  இந்த விவகாரத்தில் இதுபோன்று பல முறை பேச்சு வார்த்தை நடைபெற்றுள்ளது என்று கூறினார்.

அதுபோல வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் தவான், ஏற்கனவே, அலகாபாத் உயர்நீதி மன்றம் கூறயது. ஆனால், அது வெற்றிகரமாக நடைபெறவில்லை என்பதை சுட்டிக்காட்டினார்.

அதையடுத்து பேசிய  நீதிபதி பாப்டே, இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கவில்லை என்றும், இந்து மற்றும் முஸ்லீம் கட்சிகளுக்கு இடையிலான மோதலை தீர்ப்பதற்காக சிவில் செயல்முறை சட்டத்தின் 89 வது பிரிவின் கீழ் நீதிமன்றம் மத்தியஸ்தத்தை பயன்படுத்த நினைக்கிறது என்று தெரிவித்தார்.

அதையடுத்து வாதாடிய வழக்கறிஞர் தவான்,  நீதிபதிகள் அதை முயற்சி செய்ய விரும்பினால் நாங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம் என்று கூறினார். எனினும், சிஎஸ் வைத்திய நாதனும் மூத்த வழக்கறிஞருமான ரஞ்சித் குமார்  ஆகியோர் உச்சநீதி மன்றத்தின் இந்த கருத்துக்கு உடன்படவில்லை.

விசாரணையின் போது பார் அன்டு பெஞ்ச்  அமைப்பு சார்பில் வாதாடிய மற்றொரு வழக்கறிஞரான ரஞ்சித் குமார், “மத்தியஸ்தம் சாத்தியமற்றது, ஏற்கத்தக்கதல்ல. சட்டங்கள் மூலம் முடிவெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இவ்வாறு விவாதங்கள் நடைபெற்றன.