24 பெண்களை திருமணம் செய்த பாதிரியார் கைது

24 பெண்களை திருமணம் செய்த பாதிரியார் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கனடா நாட்டில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.

வட அமெரிக்க கண்டத்தில் யு.எஸ்.ஏ.வுக்கு அருகில் உள்ள நாடு கனடா. இங்கு பலதார திருமண தடை சட்டம் அமலில்  இருக்கிறது.

இங்குள்ள, பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் சர்ச் ஒன்றில், பாதிரியாராக இருப்பவர், வின்ஸ்டென் பிளாக்மோர் (வயது 61)  இவர், தன், 15 வயதில், முதல் திருமணம் செய்தார். அதன்பின், அடிக்கடி திருமணம் செய்துகொள்வதை வழக்கமாகவே வைத்துக்கொண்டார். தற்போது அறுபத்தியோரு வயதாகும் இவர் இதுவரை 29 பெண்களை திருமணம் செய்துகொண்டிருக்கிறார்.

149 குழந்தைகளையும் பெற்றுள்ளார்.

 

 

 

இவரது மனைவியரில் பலர், திருமணத்தின்போது, 15 வயதுக்கு உட்பட்ட சிறுமியராக இருந்தனர். இந்த நிலையில், பிளாக்மோர் மீது, பலதார திருமண தடை சட்டத்தின் கீழ், பிரிட்டிஷ் கொலம்பியா நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி, பாதிரியார் பிளாக்மோரை, ஆறு மாதம், வீட்டு சிறையில் வைக்க உத்தரவிட்டார். மேலும், அவர், 150 மணி நேரம், சமூக சேவை செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இதேபோல்,   ஐந்து பெண்களை திருமணம் செய்துகொண்ட ஜேம்ஸ் ஒலர் என்பவரை அவரை, மூன்று மாதம், வீட்டு காவலில் வைக்க, நீதிபதி உத்தரவிட்டார்.

பலதார திருமண தடை சட்டத்தை மீறியதாக, கனடாவில்,   100 வருடங்களுக்குப் பின், முதல் முறையாக, இவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.