ட்டாவா

னடா நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சாஜன் வரிசையில் நின்று மளிகை பொருட்கள் வாங்கினார்.

கொரோனா பரவுவதை தடுக்க பல நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்  பட்டுள்ளது.

அவர்களுக்கு பல இடங்களில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டுமே வெளியில் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது.

அப்போதும் சமூக இடைவெளியான ஒரு மீட்டர் இடைவெளியில் வரிசையில் நின்று பொருட்களை வாங்க வேண்டும்.

கனடா நாட்டில்  தற்போது ஊரடங்கு அமலில் உள்ளது.

அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக ஹர்ஜித் சாஜன் பதவி வகிக்கிறார்.

இவர் இந்திய வம்சாவளியினர் ஆவார்,

அவரும் மக்களுடன் வரிசையில் நின்று மளிகை பொருட்கள் வாங்கும் காட்சி புகைப்படமாகி வைரலாகி வருகிறது.