கனடா : இந்திய வம்சாவளி பெண் எம் பி கொரோனாவால் பாதிப்பு

டொரோண்டா

ந்திய வம்சாவளியினரான கனடாவின் மேற்கு பிராம்ப்டன் நாடாளுமன்ற பெண் உறுப்பினர் கமல் கேரா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

உலக நாடுகளில் வேகமாகப் பரவி வரும் கொரோனா தொற்றால் கனடாவில் 2900 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதையொட்டி கனடா அரசு அங்குள்ள பதிவு செய்யப்பட்ட செவிலியர்களை கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்குச் சேவைச் செய்ய அழைப்பு விடுத்திருந்தது.   இதையொட்டி பலரும் சேவை செய்ய முன் வந்தனர்.

இவர்களில் மேற்கு பிராம்ப்டன் நாடாளுமன்ற பெண் உறுப்பினரான கமல் கேராவும் ஒருவர் ஆவார்.  லிபரல் கட்சியைச் சேர்ந்த இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார்.  இவர் ஒரு பதிவு செய்யப்பட்ட செவிலியர் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில் இவருக்கு ஃப்ளூ அறிகுறிகள் தென்பட்டன.

அதையொட்டி தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட கமல் கேராவுக்குச் சோதனை நடந்தது.   சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உள்ளது உறுதியானது.   அவர் அதன் பிறகு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.   கனடாவில் பலர் மோசமான நிலையில் உள்ள போதிலும் தமக்கு அதிக பாதிப்பு இல்லை என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கனடா நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் அரசியல்வாதி கமல் கேரா ஆவார்.