னடா  நாட்டில் வாழும் தமிழர்களுடன் இணைந்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பொங்கல் விழாவை கொண்டாடி சிறப்பித்தார். இது அங்குள்ள தமிழர்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது.

தைத்திங்கள் முதல்நாளான தை மாதம் 1ந்தேதி உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் கனடாவில் வாழும் தமிழர்களும் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர்.

இந்த சீர்மிகு விழாவில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, வேட்டி சட்டை அணிந்து வந்து தமிழர்களுடன் இணைந்து பொங்கல் வைத்து அவர்களுடன் இணைந்து அலவளாவி  விழாவை சிறப்பித்தார்.

பொங்கல் விழாவுக்கு வாழ்த்து தெரிவித்து தனது டுவிட்டர் பதிவியில் பதிவு வெளியிட்ட ஜஸ்டின் ட்ரூடோ, தமிழர்களுடன் இணைந்து பொங்கல் விழாவை சிறப்பித்தது தமிழர்களுக்கு பெரும் சந்தோசத்தை கொடுத்தது.

அதைத்தொடர்ந்து பொங்கல் விழாவில் பேசிய ஜஸ்டின் ட்ரூடோ,  ”வணக்கம் என்று தமிழில் உரையை தொடங்கிய அவர், பின்னர் ஆங்கிலத்தில் பேசினார்.

அப்போது, கனடாவில் உள்ள தமிழர்கள் மற்றும் உலகத் தமிழர்கள் தைப்பொங்கல் பண்டிகையை 4 நாட்கள் கொண்டாடி வருகின்றனர். விவசாயிகள் அறுவடை செய்வதை சிறப்பிக்கும் வகையில்,  அறுவடை பண்டிகை யின் தொடக்கமாக தைப் பொங்கல் கொண்டாடுகிறார்கள்.

இந்த பொங்கல் விழாவில், ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இணைந்து மகிழ்ச்சியை கொண்டாட கிடைக்கும் ஒரு வாய்ப்பு இந்த  பொங்கல் திருநாள் என்று கூறினார்.

கனடா வாழ் தமிழர்கள் கனடா நாட்டுக்கு முக்கிய பங்களிப்புகளை தந்துள்ளர்கள்,  கனடாவை வலுவான நாடாக மாற்ற கனடா மக்களுடன் தமிழர்களும் திறந்த மனதோடு  இணைந்து செயல்பட்டு வருகிறார்கள், கனடாவை முன்னோக்கி எடுத்து செல்லும் வகையிலும்,  சிறந்த மற்றும் அனைவருக்கும் இணக்கமான நாடாக உருவாக்க தினமும் உழைப்போம் என்று கூறினார்.

மேலும் பொங்கல் பண்டிகை கொண்டாடும் அனைவருக்கும் தானும், சோபியும் தனது குடும்பம் சார்பாக இனிய தமிழ் பாரம்பரிய மாத வாழ்த்துக்களை கூறிக்கொள்கிறோம்.  இனிய தைப் பொங்கல் வாழ்த்துகள்.”

இவ்வாறு அவர் பேசினார்.

அதேபோல  பிரிட்டன் பிரதமர் தெரீசா மே-வும்  அங்கு வாழும் தமிழர்களுக்கு தனது டுவிட்டர் பதிவில்  தைப் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்திருந்தார்.

பழையவற்றை விடுத்து, புதிய வாய்ப்புகளை தக்கவைத்துக் கொள்ளும் நேரமிது என வாழ்த்தில் குறிப்பிட்டிருந்தார்.