னடா வாழ் தமிழர்களுடன் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பொங்கல் பானையில் அரிசி போட்டு  பொங்கல் வைத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.  இது உலக தமிழர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கனடா வாழ் தமிழர்கள் கனடா நாட்டுக்கு முக்கிய பங்களிப்புகளை தந்துள்ளர்கள் என்று தெரிவித்துள்ள கன்டா பிரதமர் ஜஸ்டின் ரூட்டோ சில ஆண்டுகளாக கனடா  நாட்டில் வாழும் தமிழர்களுடன் இணைந்து  பொங்கல் விழாவை கொண்டாடி சிறப்பித்தார். இது அங்குள்ள தமிழர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

கனடா பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில்,  பாரம்பரிய உடையில் பங்கேற்ற தமிழர்களுடன், பொங்கல் பானையில் புத்தரிசி இட்டு தனது மகிழ்ச்சியையும் அவர் வெளிப்படுத்தினார்.

இது தொடர்பாக, தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார். அதில், அன்பையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் வகையில் பொங்கல் பண்டிகை அமைந்ததாக பெருமிதம் தெரிவித்தார். தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கலைக் கொண்டாடியதில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததாக தெரிவித்து உள்ளார்.

எல்லாம் சரிதான்……ஆனால்,  பாரம்பரியமிக்க தமிழர்களின் பொங்கல்  திருவிழாவில், பிரதமர் தனது ஷூ காலுடன் பொங்கல் பானையில் புத்தரிசியிடுவது சற்று மன வருத்தத்தையே ஏற்படுத்துகிறது…

இதை அங்குள்ள தமிழர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லையா…? அல்லது ஏதோ தமிழர்களை திருப்திப்படுத்த பிரதமர் ரூட்டோ இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறாரா என்பது அங்கு வாழ் தமிழர்களுக்கே வெளிச்சம்…

இனி வரும் ஆண்டுகளிலாவது இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்ப்பதே தமிழர்களுக்கு பெருமை….