கனடா: போதை மருந்து தாவரத்தை வளர்க்க சட்ட மசோதா தாக்கல்

கன்னாபிஸ் அல்லது மரிஜுவானா என்று அழைக்கப்படும் போதை மருந்து தாவரம் வளர்ப்பதை ​​கனடா அரசு சட்டப்பூர்வமாக்கியுள்ளது. கனடா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சட்ட மசோதாவில் மரிஜுவானாவை மீண்டும் பயன்படுத்த ஒப்புதல் கேட்கப்பட்ட நிலையில் 205 வாக்குகள் பெறப்பட்டன. இதனை தொடர்ந்து மர்ஜுவானா பயன்பாடு குறித்து சட்டம் இயற்றும் மசோதா செனட் குழுவிற்கு அனுப்பப்பட்டது. கவர்னர் ஜெனரல் ஒப்புதல் அளித்த நிலையில் வரும் செப்டம்பர் மாதத்தில் இருந்து மரிஜூவானா பயன்பாட்டிற்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. செனட் குழு இந்த சட்ட மசோதாவை சில நாட்களுக்கு தள்ளி போடலாமே தவிற அதனை தடுக்க முடியாது என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
marijuna
கடந்த வாரம் செண்ட் குழுவால் கன்னாபிஸ் குறித்து முன்மொழியப்பட்ட 46 திருத்தங்களில் 13 திருத்தங்களை அரசு நிராகரித்தது. இதனை தொடர்ந்து சில மாதங்கள் ஆராய்ச்சி செய்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் கன்னாபிஸ் செடிகளை வீட்டில் பயிரிட்டு வளர்ப்பதன் மூலம் அதனை பாதுகாப்பாக பயன்படுத்தலாம் என கருத்து தெரிவித்தார். மேலும் கன்னடர்கள் வீட்டிலே பீர் அல்லது ஒயின் தயாரிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஜின்னெட் பெடிபாஸ் டெய்லர் தெரிவித்தார்.

கனடாவை சேர்ந்த மக்கள் கன்னாபிஸ் செடியை மருத்துவ பயன்பாட்டிற்காக வளர்ப்பது சாத்தியம் என்றும், அதனை சட்டப்பூர்வமாக்க விரும்புவதாகவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், வீட்டில் கன்னாபிஸ் சாகுபடி செய்ய நான்கு பானைகளில் கன்னாபிஸ் செடிகள் வழங்க நிபுணத்துவ குழுவை அமைக்கப்பட்டுள்ளதாக லிபெரல் அரசு தெரிவித்துள்ளது. கன்னாபிஸ் வளர்ப்பு குறித்த விளம்பரங்களில் சில கட்டுப்பாடுகளை மசோதா விதித்துள்ளது. கன்னாபிஸ் விளம்பரங்களில் காலியாக உள்ள பாக்கெட்டுகளை மட்டுமே பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசியல் பின்னடைவுகள் இருந்த போதிலும் கனட பிரதமர் ட்ரூடோ மருந்து தயாரிப்பு, விற்பனை மற்றும் நுகர்வு ஆகியவற்றில் சில சீர்த்திருத்தங்களை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.