கனடா தேசிய கீதத்தை தமிழில் வெளியிட்டு அந்நாட்டு அரசு தமிழர்களை கவுரவப்படுத்தி உள்ளது.

கனடா நாட்டில் ஈழத்தமிழர்கள் ஏராளமானோர் வசிக்கின்றனர். இவர்கள் அந்நாட்டின் குடியுரிமை பெற்றவர்கள்.

கனடா அரசு, தமிழ் மொழிக்கு எப்போதுமே தனி மரியாதை அளித்து வருகிறது. மேலும் தமிழர்களின் கலாச்சார விழாக்களை கொண்டாடுவது, பொது அறிவிப்புகளை தமிழில் வெளியிடுவது என்று சிறப்பாக செயல்பட்டு வருகிறது கனடா அரசு.

இந்த நிலையில் கனடா நாட்டின் 150வது சுதந்திர தினம் வருகிற ஜூலை 1ம் தேதி கொண்டாடப்படுகிறது.  இதற்காக தமிழ் உட்பட மொத்தம் 12 மொழிகளில் கனடா தேசிய கீதம் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ், அரபி, அமெரிக்க சைகை மொழி, கிரேக்கம், ஆங்கிலம், பிரஞ்சு, ஜெர்மன், இத்தாலியன், சீன மான்டரின், பஞ்சாபி, ஸ்பானிஷ், டாகாலோக் ஆகிய 12 மொழிகளில் கனடா தேசிய கீதம் வெளியிடப்பட்டு உள்ளது. இதுவரை ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழியில் மட்டுமே இருந்தது.