ரேஷன் கடைகளில் இலவச உணவுப் பொருட்கள் விநியோகம் ரத்து! தமிழக அரசு

--

சென்னை:

மிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 4 மாதமாக அனைத்து ரேசன் அட்டை தாரர்களுக்கும் இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வந்தன. இனிமேல் இலவசம் ரத்து செய்யப்படுவதாகவும், இனி இலவசப் பொருட்கள் விநியோகம் கிடையாது என அறிவித்து உள்ளது

.

கொரோனா  ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் அனைத்து குடும்ப அடைதாரர்களுக்கும் ரூ.1000 உதவித் தொகையுடன், விலையில்லா அரிசி, சர்க்கரை பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் தொடர்ந்து மே, ஜூன் மற்றும் ஜூலை மாதத்திலும் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஏப்ரல், மே மற்றும்  ஜூன் மாதங்களில் வழங்கிய அரிசி அளவின்படி கூடுதல் அரிசியுடன்  நியாயவிலைக் கடைகளில் விலை இன்றி வழங்கப்பட்டது. ஒரு கிலோ சர்க்கரை, துவரம்பருப்பு, பாமாயில் உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு 4 மாதங்களாக வழங்கப்பட்டு வந்த  இலவச ரேஷன் பொருட்கள் ஆகஸ்ட் மாதம் வழங்கப்படாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அடுத்த மாதம் முதல் அத்தியாவசிய  பொருட்களை பணம் கொடுத்துத் தான் பெற வேண்டும் என்று கூறியுள்ளது. மேலும், ஆகஸ்ட் மாத பொருட்கள் வாங்குவதற்கான டோக்கன் 1,3,4 தேதிகளில் வழங்கப்படும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.

ஊரடங்கு காரணமாக நடுத்தர  மக்களின் வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு வராத நிலையில், ரேஷன் கடைகளில் இலவசப் பொருட்கள் அளிக்கப்படாது என்ற அரசு அறிவித்துள்ள ஏழை மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.