தேர்தல் ரத்து: தமிழ்நாடே ஊழலில் உழல்கிறது! முன்னாள் தேர்தல் ஆணையர் கோபாலசாமி

சென்னை:

மிழகத்தில் இதுவரை  3 முறை தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தமிழகத்தை சேர்ந்த  முன்னாள் தேர்தல் ஆணையர் கோபாலசாமி கூறியுள்ளார்.

மேலும், இது வெட்ககேடான செயல் என்றும், தமிழகம் ஊழலில் திளைத்துள்ளது என்பதை பறைசாற்றும் விதமாக இருப்பதாகவும் கூறி உள்ளார்.

நாளை மறுதினம் ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடைபெற இருந்த நிலையில்,  பணப்பட்டுவாடா காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மத்திய வருமானவரித்துறையினர் நடத்தி அதிரடி ரெய்டில், அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு உட்பட 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர்  89 கோடி ரூபாய் வரை ஆர்கே நகரில் செலவு செய்ததற்கான ஆவணதை கைப்பற்றினர்.

வருமான வரித்துறையினரின் அறிக்கையை தொடர்ந்தே இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழகத்தை சேர்ந்த  முன்னாள் தேர்தல் ஆணையர் கோபாலசாமி கூறியதாவது,

‘தமிழகத்தில் 3 முறை தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது மானக்கேடு. வெட்க கேடு என்றும், இந்தியாவில் வேறெங்கும் இதுபோல் நடக்கவில்லை என்று கூறியுள்ளார்.

தமிழகத்தில் மட்டும்தான் இது போன்று நடந்துள்ளது. இது சிந்திக்க வேண்டிய விஷயம். 3 முறை தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றால் தமிழ்நாடே ஊழலில் உழல்கிறது என்றுதான் மற்ற மாநிலத்தில் உள்ளவர்கள் தீர்மானிப்பார்கள்’.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.