சென்னை:

மிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், ஏற்கனவே அறிவித்த திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக திமுக தலைமை அறிவித்து உள்ளது.

தமிழக சட்டமன்றத்தின் புத்தாண்டு கூட்டத்தொடர் இன்று (6ந்தேதி) கவர்னர் உரையுடன் தொடங்கியது. முன்னதாக திமுக சார்பில்,  இன்று மாலை  5 மணிக்கு திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என திமுக தலைமை அறிவித்திருந்தது.

 

இந்த நிலையில், இன்று தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டமன்றத்தில் இருந்து  திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட கட்சி எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

அதைத்தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அறையில், திமுக எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் நடைபெற்றது. இதில், சட்டமன்றத்தில் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகள், கேட்கப்பட கேள்விகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதையடுத்து,  இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில்  மாலை 5 மணிக்கு நடக்கவிருந்த திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ரத்து செய்யபட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

திமுக தலைவர் ஸ்டாலின், பேரவையில் உள்ள தனது அறையிலேயே திமுக எம்.எல்.ஏ.க்களின் கூட்டத்தை நடத்தி முடித்து விட்டதால், அண்ணா அறிவாலயம்  கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.