டில்லி: 

மாதந்தோறும் சமையல் காஸ் சிலிண்டர் விலையை உயர்த்திக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு அளித்த அனுமதியை மத்திய அரசு திரும்ப பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை முதல் சமையல் காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள்           மாதந்தோறும் ரூ.2 உயர்த்தி கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது. காஸ் மீதான மானியம் ரத்தாகும் வரை விலை உயர்த்த அனுமதிக்கப்பட்டது. இதனால் காஸ் சிலிண்டர்  10 முறை விலை உயர்ந்தது.    தொடர்ந்து  கடந்த ஜூன் 1ம் தேதி முதல் காஸ் சிலிண்டர் விலை அரசு அனுமதியுடன் மாதம் ரூ.4 உயர்த்தப்பட்டது. அடுத்த மார்ச் வரை விலையை உயர்த்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில் விலை உயர்த்திக் கொள்ள வழங்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு திரும்ப பெற்று      கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது மத்திய அரசு அதிகாரிகள் சிலர் கூறுகையில், ‘‘மாதந்தோறும் விலை உயர்த்தியது மக்களிடம் எதிர்ப்பை ஏற்படுத்தியது. இதனால் விலையை உயர்த்துவது ரத்து செய்யப்பட்டது. கடந்த அக்டோபரில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அதன் பிறகு விலை உயர்த்தப்படவில்லை. வரி காரணமாகவே தற்போது விலை உயர்த்தப்பட்டது’’ என்றார்.