புதுச்சேரி:

புதுச்சேரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்த 770 மாணவர்கள் சேர்க்கையை ரத்து செய்து எம்சிஐ (இந்திய மெடிக்கல் கவுன்சில்) உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவுக்கு ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.

எம்சிஐ உத்தரவுக்கு தடை விதிக்க கோரி மாணவி திவ்யா உள்பட 108 பேர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதி மன்றம், எம்சிஐ உத்தரவுக்கு இடைகால தடை விதித்துள்ளது.

 

புதுச்சேரியில் 7 மருத்துவக்கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 4 கல்லூரிகள் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள். 3 மருத்துவ கல்லூரிகள். இந்த கல்லூரிகளுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கை சென்டாக் எனப்படும் அமைப்பு மூலம் சேர்க்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு இந்திய மருத்துவ கவுன்சில் நீட் மூலம் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டும், அதன்படி செயல்படாமல் நிரப்பப்பட்ட  770 மருத்துவ கல்லூரி மாணவர்களை வெளியேற்ற இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த ஆண்டு சேர்க்கப்பட்ட அந்த மாணவர்கள் தற்போது இரண்டாம் ஆண்டு மருத்துவம் பயின்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.