மதுரை: தமிழக அரசு தற்காலிகமாக தொடங்கி வரும் மினி கிளினிக்குகளில், மருத்துவர்கள், செவிலியர்கள் தனியார் ஏஜன்சி மூலம் நடைபெற்று வந்த நிலையில், அவர்களின்  நியமன உத்தரவை உயர்நீதிமன்றம் மதுரை கிளை அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டு உளளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மற்றும் உடல்நலப் பாதிப்புகளை தடுக்கும் வகையில், தமிழக அரசு அம்மா மினி கிளினிக் திட்டம் பெயரில் 2ஆயிரம் மினி கிளிக்குகளை தமிழகம் முழுவதும் தொடங்கியது. அதனப்டி, இந்த மினி கிளினிக்கில், ஒரு டாக்டர், ஒரு நர்சு, ஒரு மருத்துவ பணியாளர் என 3 பேர் பணியில் இருப்பார்கள். மினி கிளினிக்குகள் சென்னையில், காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். கிராமப்புறங்களில் மட்டும் மாலை 7 மணி வரை திறந்திருக்கும் இங்கு, காய்ச்சல், தலைவலி போன்ற எளிதான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதுடன், கொரோனா தொற்று இருக்கிறதா? என்பதையும் கண்டறிந்து மேல் சிகிச்சைக்கு, பெரிய ஆஸ்பத்திரிகளுக்கு நோயாளிகள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், இந்த மினி கிளினிக்குகளில்  பணிபுரிய தனியார் ஏஜென்சி மூலம் மருத்துவப் பணியாளர்கள், நர்சுகள் தேர்வு செய்யப்பட்டு வந்தனர். இதில் முறைகேடு நடைபெற்று வருவதாகவும் புகார்கள் எழுந்தது.

இதையடுத்து, மதுரை வளர்நகரை சேர்ந்த வக்கீல் வைரம் சந்தோஷ் என்பவர், மினி கிளினிக்குக்கு பணி அமர்த்தப்படுபவர்கள், தேர்வு வாரியம் மூலம் முறையாக தேர்வு செய்ய உத்தரவிட வேண்டும் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ் ஆனந்தி அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது,   மினி கிளினிக் என்பது கொரோனா தொற்று காலத்திற்காக தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள ஏற்பாடு தான். அரசு தலைமை மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பணி நியமனம் என்பது மருத்துவ பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும். ஆனால் மினி கிளினிக்குகளில் அவசர நிலையை கருத்தில் கொண்டு தற்காலிகமாக பணியாளர்கள் நியமனம் செய்வது மட்டுமே. இவர்கள் பணி நியமனம் என்பது மத்திய சுகாதாரத்துறை இயக்ககம் பரிந்துரையின் அடிப்படையிலேயே குழு அமைத்து நடத்தப்படுகிறது என்று அரசு தெரிவித்தது.

இந்த வழக்கின் நேற்றைய விசாரணையைத் தொடர்ந்து, மினி கிளினிக் பணியாளர்கள் நியமனம் மாவட்ட சுகாதாரக்குழு மூலமாகவே நடைபெற வேண்டும். ஒருவேளை தனியார் நிறுவனங்கள் மூலமாக பணி நியமனங்கள் செய்யப்பட்டிருந்தால் அவை செல்லாது.

தற்போது நியமனம் செய்யப்பட்டுள்ள ஊழியர்கள் ஓராண்டுக்கு மேல் பணிபுரிய நேரிட்டால் அவர்களை மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலமாக பணி நியமனம் செய்து கொள்ளலாம் என்றும்,  நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.