கோவை: வருமானவரித் துறை சோதனை நடத்தினால் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று எந்தச் சட்டத்திலும் சொல்லப்படவில்லை பாஜக எம்பி சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் நேற்று  செய்தியாளர்களைச் சந்தித்த சுப்பிரமணிய சாமி, “ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் பரவாயில்லை.  ஆனால் தி.மு.க. மட்டும் வெற்றி பெறவே கூடாது.
வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினால், தேர்தல் ரத்து செய்யப்பட வேண்டும் என்று எந்த சட்டத்திலும் சொல்லப்படவில்லை.

வருமான வரித்துறை சோதனைக்கும் மத்திய அரசுக்கும் தொடர்பில்லை. இது அதிகாரிகளின் தீர்மானத்தின் பேரில் நடந்த நடவடிக்கை.

யாரோ ஒரு வெள்ளைக்காரன் எழுதி வைத்த புத்தகத்தைப் படித்துவிட்டு பாஜக எம்.பி. தருண் விஜய் எம்.பி. தென்னிந்தியர்களை பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைவரும் ஒன்று தான். இதில் வேறுபாடு கிடையாது. நிறம் பற்றி பேசுவதே தவறு” என்று சு.சாமி தெரிவித்தார்.