புற்றுநோய் விழிப்புணர்வு: ஓமன் வாழ் இந்தியர்களுடன் நடிகை கவுதமி கலந்துரையாடல்..

ஓமன்:

மன் நாட்டில் வசித்து வரும் இந்தியர்களுடன் நடிகை கவுதமி புற்றுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உரையாடினார். கவுதமிக்கு ஓமன் வாழ் இந்தியர்கள்சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.

தமிழ் திரைப்பட கதாநாயகியாக பிரபல நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்றவர் நடிகை கவுதமி. இவர்  15 வருடங்களுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில், அதை எதிர்த்து தைரியமுடன் போராடி சிகிச்சை பெற்று முழுமையாக குணம் அடைந்தார்.

அதன் பிறகு ‘லைப் வின்னர்’ என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கி புற்றுநோய் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். புற்று நோயில் இருந்து முழுமையாக குணமடைய முடியும் என்பதற்கு நானே சாட்சி என்று கூறி புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அதை எதிர்த்து போராடி குணமடைய வேண்டும் என்று  அவர்களிடையே பேசி ஊக்குவித்து வருகிறார்.

இவரை கவுரவிக்கும் வகையில், மத்திய அரசு நடிகை கவுதமியும் மத்திய திரைப்பட தணிக்கை வாரிய உறுப்பினராகவும் நியமித்தது.

இந்த நிலையில் கவுதமி தற்போது ஓமன் நாட்டில் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அங்கு வாழ்ந்து வரும் இந்தியர்கள், மற்றும் பணி நிமித்தமாக இந்தியாவில் இருந்து அங்கு சென்று வசித்து வருபவர்கள் மத்தியில் நடிகை கவுதமி உரையாற்றினார்.

ஓமன் நாட்டின் மஸ்கட்-பர்ஃகா நகரங்களில் இருக்கும்  கலந்துரையாடினார். புற்றுநோயின் நடைமுறை அனுபவங்கள்-தாக்கங்கள் மற்றும் விழிப்புணர்வு பற்றிய காணாெளியும்  கருத்தக்களையும்  அவர்களுடனும், அவர்களின் இந்தியா-வாழ் உறவினர்களுடனும் நடிகை கவுதமி பகிர்ந்து கொண்டார்

அப்போது அவர்களுடன் சந்திப்பு குறித்து பேசிய கவுதமி, இந்த நிகழ்ச்சியில் அனைவரும் ஆத்மார்த்தமாகவும் மிகுந்த ஈடுபட்டனும் கலந்துகொண்டது ஒரு மறக்க முடியாத தருணம் ஆகும் என்று தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published.