மார்பக அறுவைச்சிகிச்சை உட்பொருளால் கேன்சர் ஆபத்து!

லண்டன்:    அறுவை சிகிச்சையின் மூலம் மார்பகத்தினுள் பொருத்தப்படும் உட்பொருள் விற்பனையை ஐரோப்பாவில் விலக்கிக்கொள்வதாக பிரஞ்சு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பாவில் மார்பக அறுவை சிகிச்சை மூலம் மார்பகத்தினுள் பஞ்சு போன்ற பொருள் பொருத்தப்பட்டு வந்தது. அப்பொருளின் முனைகள் கடினமனதாக இருப்பதால் அவை  புற்றுநோயை உண்டாகிறது என்று ஆங்கில பத்திரிகையான ‘தி கார்டியன்’ செய்தி வெளியிட்டு இருந்தது. அதையொட்டி நடத்தப்பட்ட விசாரணையில் அச்செய்தி உண்மைஎன தெரிய வந்தது. 

 

அதனையடுத்து, அந்த உட்பொருளை ஐரொஇஒரோப்பாவில் விற்று வந்த பிரஞ்சு நிறுவனம் தனது விற்பனையை திரும்பப் பெற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது. இந்நிலையில், மார்பக அறுவை சிசிக்கை நிபுணர்கள், ஏற்கனவே இம்மாதிரியான அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள் இதுகுறித்து பயப்படத் தேவையில்லை என அறிவிறுத்தியுள்ளனர்.