ஜெனிவா: கடந்த 2018ம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 1.16 மில்லியன் புதிய கேன்சர் நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார மையம் வெளியிட்ட புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

அந்தப் புள்ளி விபரத்தின்படி, 10 இந்தியர்களில் ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகவும், 15 பேரில் ஒருவர் புற்றுநோய்க்கு பலியாகிவிடுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

புற்றுநோய் தொடர்பான உலகளாவிய திட்டத்தை வகுக்கவும், ஆராய்ச்சி மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இரண்டுவிதமான அறிக்கைகள் வெளியிடப்பட்டன.

கடந்த 2018ம் ஆண்டின் புள்ளிவிபரப்படி, நாட்டில் 1.16 மில்லியன் புதிய கேன்சர் நோயாளிகளும், 784800 கேன்சர் மரணங்களும் கண்டறியப்பட்டுள்ளன. மேலும், 5 ஆண்டுகளாக நோயுள்ளவர்கள் 2.26 மில்லியன் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.