புற்றுநோயால் பாதிக்கப்பட்ட போதிலும் கேரளாவிற்கு ரூ.5000 நிதி அளித்த பிச்சைக்காரர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிச்சைக்காரர் ஒருவர் ரூ.5,000 பணத்தை கேரளா வெள்ள நிவாரண நிதிக்காக நன்கொடையாக வழங்கி உள்ளார். வாழ்விற்காக போராடிக்கொண்டிருக்கும் அந்த முதியவர் நன்கொடை கொடுத்த சம்பவம் குஜராத் மாநிலத்தில் நடந்துள்ளது.

old-man-fund

குஜராத்தின் மெஹன்சா பகுதியை சேர்ந்தவர் கிம்ஜி பிரஜாபதி(71). வயிற்று புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் அப்பகுதியில் பிச்சை எடுத்து வருகிறார். இதற்காக கடந்த மூன்று மாதமாக அவர் சிகிச்சை எடுத்து வருகிறார். இந்நிலையில் டந்த மாதம் பொழிந்த கனமழையினால் கேரளா மாநிலம் பாதிப்பிற்குளான செய்தியை கிம்ஜி அறிந்துள்ளார்.

இதனால் மிகுந்த கவலையடைந்த அவர் பாலன்பூர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து தான் வைத்திருந்த ரூ.5,000 பணத்தை கேரளாவின் வெள்ள நிவாரண நிதிக்காக அளித்துள்ளார். அவர் அளித்த பணத்தை கேரளா முதலமைச்சர் நிவாரண நிதிக்கான வங்கியில் செலுத்தப்பட்டு, அதன் ரசீது கிம்ஜியிடம் அளிக்கப்பட்டது.

old-man-fund-to-kerala

வறுமையிலும், உயிருக்காக போராடி வரும் சூழலில் பிறருக்கு உதவி செய்த கிம்ஜியின் செயல் அனைவரையும் நெகிழச்சியில் ஆழ்த்தியது. கிம்ஜி புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருந்தாலும், மெஹன்சா பகுதியில் உள்ள ஜெயின் கோயில் வாசலில் தினமும் பிச்சை எடுத்து வருகிறார். அவருக்கு இதுவரை மூன்று முறை கீமோதெரபி சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.

பிச்சை எடுத்து வந்தாலும், விளிம்பு நிலையிலிருந்து பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பேனா, புத்தகங்கள், சீருடைகள் மற்றும் பிற கல்வி உதவிப் பொருட்களை வாங்கிக் கொடுத்து உதவி புரிந்து வருகிறார் படிக்காத மேதையான கிம்ஜி பிரஜாபதி.