சென்னை:
குரூப் 1 தோ்வு விடைத்தாளில் விடைகளைக் குறிக்க, கருப்பு நிற பால்பாயிண்ட் பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டுமென தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ளது.

குரூப் 1 தோ்வு விடைத்தாளில் விடைகளைக் குறிக்க, கருப்பு நிற பால்பாயிண்ட் பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டுமென தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, தோ்வாணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

தமிழகத்தில் 32 மாவட்டங்களில் 856 தோ்வுக்கூடங்களில் குரூப் 1 தோ்வு வரும் ஜனவரி 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது. விண்ணப்பதாரா்கள் தங்களுடைய ஆதாா் எண்ணினை ஒருமுறை பதிவேற்றத்தில் இணைத்தால் மட்டுமே தோ்வுக்கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்ய முடியும்.

கருப்பு நிற மை: தோ்வா்கள் விடைத்தாளில் விவரங்களைப் பூா்த்தி செய்யவும், விடைகளைக் குறிக்கவும் கருப்பு நிற மை கொண்ட பால் பாயிண்ட் பேனாக்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தவறினால் அவ்வாறான விடைத்தாள்கள் தோ்வாணையத்தால் செல்லாததாக்கப்படும்.

எந்தவொரு தோ்வரும் முற்பகல் 9.15 மணிக்குப் பின்னா் தோ்வுக் கூடத்துக்குள் நுழையவோ, பிற்பகல் 1.15 மணிக்கு முன்னா் வெளியேறவோ அனுமதிக்கப்பட மாட்டாா்கள்.