சென்னையில் மூட்டை மூட்டையாக கஞ்சா: வடமாநில கும்பல் கைது!

சென்னை:

சென்னை பாரிமுனை அருகே  மூட்டை மூட்டையாக கஞ்சா பதுக்கி வைத்திருந்த  வடமாநில கடத்தல் கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை மண்ணடியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் கஞ்சா மூட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு விரைந்த  எஸ்பிளனேடு போலீஸார், குறிப்பிட்ட விடுதிக்கு சென்ற  சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, அங்கு பல லட்சம் ரூபாய் மதிப்பிலான 16 பண்டல்கள் கஞ்சா அங்கு பதுக்கி வைக்கப் பட்டிருந்தது தெரியவந்தது. அதை கைப்பற்றிய காவல்துறையினர், கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தாகக் கூறி அன்வர் பாஷா, சிகந்தர் பாட்ஷா, குர்ஷத் அலாம், அன்வர் ஹுசைன், ரஃபிகுல் இஸ்லாம், ரபீக் மியா ஆகியோரை கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில்,  இவர்கள் அனைவரும் வட மாநிலத்தைச் சேர்ந்த வர்கள் என்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்டவரில் அன்வர் பாஷா என்பவர் கடந்த 20 நாட்களுக்கு முன்பு 8 கிலோ கஞ்சா பதுக்கியிருந்த காரணத்துக்காக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு, நேற்று ஜாமீனில் வெளியே வந்த நிலையில், இன்று மீண்டும் கைது செய்யப்பட்டு உள்ளார்.

இவர்கள் தங்கியிருந்த விடுதி அறை, ரசல் மியா மற்றும் சைபுன் ஆகியோர் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதும், வடமாநில இளைஞர்களுக்கு வேலைவாங்கித் தருவதாக அழைத்து வந்து, இங்கு கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக  சல் மியா மற்றும் சைபொன் ஆகியோ போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.