அதிமுகவை அழிக்க கருணாநிதியாலேயே முடியவில்லை…. ஸ்டாலின் எம்மாத்திரம்! எடப்பாடி நக்கல்

சேலம்:

திமுகவை அழிக்க நினைத்த மறைந்த கருணாநிதியாலேயே முடியவில்லை… அவரால் முடியாதது ஸ்டாலினால் முடியுமா? என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நக்கலாக கூறினார்.

அதிமுகவை உருவாக்கிய  எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவுக்கு கருணாநிதியும், திமுகவும்  பல்வேறு தடைகளை திமுக ஏற்படுத்தியது. ஆனால், அவைகளில் இருந்து ருவரும் மீண்டெழுந்து வந்தனர். அதைப் போலவே தற்போது அதிமுகவும் மீண்டெழும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முதல்வர் பழனிச்சாமி,  திமுகவில் அமைச்சர்களாக இருந்த 10 அல்லது 11 பேர் மீது பல்வேறு நீதிமன்றங்களில் ஊழல் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. அவை எம்.பி மற்றும் எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்க இருக்கும் சிறப்பு நீதிமன்றங்களுக்குக் கீழ் விசா ரணைக்கு வரும். இந்த வழக்குகளில் அவர்களுக்கு தண்டனை கிடைக்கும் என்றார்.

அவர்கள் மீதான வழக்குகளை மறைக்கத்தான், அதிமுகவுக்கு எதிராகவும், நம் கட்சியின் முக்கியப் பொறுப்பு களில் இருப்பவர்களுக்கு எதிராகவும் தொடர்ந்து ஊழல் வழக்கை திமுக தொடுத்து வருகிறது என்று குற்றம் சாட்டினார்.

அவர்கள் அதிமுக-வை அழிக்கும் நோக்கில் தான் இதைப் போன்ற நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். ஆனால், அதிமுக அழைக்க நினைத்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த,  கருணாநிதியாலேயே அவர் வாழ்நாள் முழுவதும் சாதிக்க முடியாததை, அவர் மகன்  ஸ்டாலின் எப்படி சாதிப்பார்? என கேள்வி எழுப்பினார்.

சமீப காலமாக முதல்வர் எடப்பாடி மற்றும் அதிமுக அமைச்சர்கள் மீது  திமுக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டு களை சுமத்தி வருகின்றது. பல வழக்குகளும் போட்டுள்ளனர். இதன் காரணமாக திமுகமீது கோபத்தில் உள்ள அதிமுக, தற்போது திமுகமீதான பாய்ச்சலை அதிகரித்து உள்ளது.

You may have missed