பெங்களூரு:
காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பை செயல்படுத்த முடியாது கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்து உள்ளார்.
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு கூடுதல் நீர் திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு செயல்படுத்த இயலாததாகும் என்றும் இது தொடர்பாக நாளை கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என அம்மாநில முதல்வர் சித்தராமையா கூறினார்.
1suprme-court
காவிரியிலிருந்து தினமும் வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீரை தமிழகத்திற்கு திறந்துவிட உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. மேலும், 4 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
காவிரி நதிநீர் தொடர்பான வழக்கு மீண்டும் வரும் 27 ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
, பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த சித்தராமையா கூறுகையில், கர்நாடக அணைகளில் உள்ள நீர் இருப்பு விவரங்களை ஆதாரத்துடன் மேற்பார்வை குழுவிடம் அளிக்கப்பட்டது. 20 முதல் 30ம் தேதி வரை வினாடிக்கு 3000 கன அடி நீரை திறந்து விட மேற்பார்வைக்குழு உத்தரவிட்டது. உச்சநீதிமன்றமோ வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீரை திறந்து விட உத்தரவிட்டுள்ளது என சித்தராமையா கூறினார்.
உச்சநீதிமன்ற உத்தரவு செயல்படுத்த இயலாததாகும் என்றும் உச்சநீதிமன்ற உத்தரவு தொடர்பாக நாளை மாலை 5 மணிக்கு கர்நாடக அமைச்சரவைக்கு கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் எனவும் சித்தராமையா தெரிவித்தார். கர்நாடகாவை சேர்ந்த அனைத்து கட்சியினர், எம்.பி.க்கள் கூட்டத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த கூட்டத்தில்  கர்நாடக முதல்வர் சித்தராமையா பதவியை ராஜினாமா செய்வார் என பரபரப்பாக பேசப்படுகிறது.
உச்ச நீதி மன்ற தீர்ப்பை கர்நாடக அரசு மதிக்காமல் செயல்படுத்த இயலாதது என்று கூறியிருப்பது நீதி மன்ற அவமதிப்பு குற்றமாகும். ஏற்கனவே 10 நாட்கள் தண்ணீர் திறந்துவிட உச்ச நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில் ஒரு நாளைக்கு முன்னதாகவே  நீர் திறப்பை நிறுத்தியது கர்நாடகா.
ஆனால் இவை எதையும் கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்த்துகொண்டிருக்கிறது மத்திய பாரதியஜனதா அரசு.
சட்டம் அனைவருக்கும் சமம் என்றால் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட ஆவன செய்ய வேண்டும். அல்லது கர்நாடக அணைகளை மத்தியஅரசு தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவர வேண்டும். இவை எதையும் செய்யவில்லை என்றால் மத்திய அரசு என்று ஒன்று இருக்கிறதா என்ற சந்தேகம் மக்களுக்கு தோன்றிவிடும்.
மத்திய அரசு என்ன செய்யப்போகிறது ….!