கிறிஸ்து பிறப்பை வரவேற்கும் கெப்பிடோல் கிறிஸ்துமஸ் மரம்! (வீடியோ)

யேசு கிறிஸ்து பிறப்பை வரவேற்கும் வகையில் அமெரிக்கா கெப்பிடோல் நாடாளுமன்றத்தில் அமைக்கப்படும் கிறிஸ்துமஸ் மரம் மின் விளக்குகள் அலங்கரிக்கப்பட்டு  ஒளிரூட்டப்படடது. இதை காண ஏராளமானோர் குவிந்தனர்.

கிறிஸ்துவின் பிறப்பை வரவேற்கும் விதமாக கடந்த 1964-ஆம் ஆண்டு  முதல்  அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள கெப்பிடோல் நாடாளுமன்ற வளாகத்தில். கிறிஸ்துமஸ் மரம் அமைக்கப்பட்டு, அதை வண்ண விளக்குகளால் ஒளிரூட்டப்படும் நடை முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விழாவை சிறப்பிக்கும் வகையில், முன்னோடியாக அமெரிக்காவில் உள்ள வில்லாமித்தே தேசிய பூங்காவிலிருந்து கிறிஸ்துமஸ் மரம் வரவழைக்கப்பட்டு, அதற்கு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

இந்த மரத்துக்கு ஒளிரூட்டும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் பால் ரயன் கிறிஸ்துமஸ் மரத்தில் அலங்கரிக்கப்பட்டுள்ள வண்ண விளக்குகளின் சுவிட்சை ஆன் செய்து ஒளிரூட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த  மின்விளக்கு அலங்காரம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.